Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நின்ற படிப்பு….. மகனுக்காக தந்தை செய்த காரியம்….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசுந்தர்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்த குணசுந்தர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் குணசுந்தர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகனின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதற்காக முருகேசன், குரும்பபாளையத்தில் இருக்கும் தனது தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் குணசுந்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |