Categories
தேசிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற இந்திய மாணவன்… நேர்ந்த விபரீதம்… நடந்தது என்ன…?

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற முயற்சி செய்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த மாணவர் சென்னை ஐடியில் முதுகலை பட்டம் பெற்று கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்நிலையில் சுபம் பற்றி அவரது பெற்றோர் பேசும்போது முகம் நெஞ்சு பகுதி மற்றும் வயிறு என 11 இடங்களில் மிக மோசமான கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய 27 வயது நபர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |