ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பொது தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது லிபரல் கட்சித் தலைவர் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று நார்மன் பிரதமராக தேர்வானார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மல் அல்பேனீஸ் முறைப்படி நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை பதிவேற்றம் செய்து கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராவார். அவருடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் புதிதாக மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஜெனரல் டேவிட் ஹார்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் நார்மல் மகன் நாதன்(21) மற்றும் நார்மலின் காதலியான ஜோடீ ஹெய்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் ஜப்பான் செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் வாழ்த்து செய்தி கூறினார். மேலும் இந்தியா,ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் ‘குவாட்’ என்னும் நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்ககிற 2 வது உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. இதில் நான்கு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.