பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரப்படும் வசதியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனைத்து ஊடகங்களும் விளம்பர வருமானத்தை இறந்துள்ளன. அதனால் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு அதிக அளவு வருமானங்களை பெறுகின்றன. அதனை தடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட கூடிய வகையில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது.
அவ்வகையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழிவகை செய்யக் கூடிய வகையில் சட்டம் கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் விளம்பர வருமானகளிலிருந்து 6 பில்லியன் டாலர் செய்தி நிறுவனங்களுக்கு செல்லக்கூடும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிர கூடிய வசதியை முற்றிலும் நிறுத்த போவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. அதே சமயத்தில் கூகுள் நிறுவனமும் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.