ஆஸ்திரேலிய ஆந்தையை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியில் பந்தல் அமைப்பாளரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் வித்தியாசமாக ஒரு ஆந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது ஆஸ்திரேலிய ஆந்தை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சண்முகம் பொதுமக்களின் உதவியோடு அந்த ஆந்தையை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். அதன்பின் வனத்துறையினர் பிடிப்பட்ட ஆந்தையை வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.