Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய மக்களுக்கு இலவச தடுப்பூசி… பிரதமர் அதிரடி முடிவு…!!!

ஆஸ்திரேலிய மக்களுக்கு கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகாக ஆஸ்திரேலிய அரசு 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ” ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாக கருதப்படுகிறது.

அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தத் தடுப்பூசியைப் ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களுக்கும் கிடைக்கும். மேலும் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கின்ற சோதனை வெற்றி கண்டால், நாங்கள் அதனை உறுதி செய்வோம். அதன் மூலமாக நாங்களே விநியோகிப்போம். இரண்டு கோடிக்கும் அதிகமான ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தத் தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசிகளை ஆஸ்திரேலியா போட்டுள்ள முதல் ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |