Categories
உலக செய்திகள்

ஆஸ்பத்திரியில் பற்றி எரிந்த தீ…. நாசமான மருந்து பொருட்கள்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தானின் லாகூரிலுள்ள குல்பெர்க்கில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெரும் தீ விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ எதிர்பார்த்ததை விட அதிகமாக பரவி இருந்ததால், கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து நீண்டநேரம் போராடி தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் எதிர்பாராமல் திடீரென்று தீ பரவியதால் தீயை முற்றிலுமாக அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இதுவரையிலும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மீட்பு பணியின்போது அங்கு இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள மருந்துக்கிடங்கில் முழுவதுமாக தீ பரவியதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள்கள் தீயில் எரிந்து நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Categories

Tech |