சென்னையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினியின் மனைவி லதாவுக்கு கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வளாகத்தை காலி செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் அப்பள்ளிக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினியின் மனைவி லதாவுக்கு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை காலஅவகாசம் அளித்து பதில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பள்ளியை காலி செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று லதா கோரிக்கை விடுத்ததை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.