Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆஹா அருமையான நாட்டுக்கோழி வறுவல்..!!

சுவையான, சத்துமிகுந்த, பலம் தரக்கூடிய நாட்டுக்கோழி வறுவல், உங்களுக்காக..!

முதலில் கறி வேக வைத்துக்கொள்ள தேவையானவை:
நாட்டுக்கோழி கறி              – 500 கிராம்
மஞ்சள்பொடி                         – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது         – 1 டீஸ்பூன்
வத்தல் பொடி                         – 1 டீஸ்பூன்
உப்பு                                            – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை:
பிரியாணி இலை                   – 1
பட்டை, சோம்பு லவங்கம் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்              – 2
தக்காளி                                      – 2
வத்தல் பொடி                           –  1 டீஸ்பூன்
மல்லி பொடி                             – , 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா                             – 1 டீஸ்பூன்
மிளகு தூள்                                 – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது           – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை: 
முதலில் வாணலியில் நல்ல எண்ணெய் சிறிது விட்டு சூடானதும்,  இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கிளறி அதில் கறி துண்டுகளை கொட்டி சிறிது உப்பு, வத்தல் பொடி, போட்டு,அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவேண்டும்.இதை தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு மறுபடியும் வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, சோம்பு, லவங்கம், பட்டை போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை போட வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளுங்கள், பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து  வதக்க வேண்டும்.இதோடு கரம் மசாலா,மல்லி தூள், வத்தல் பொடி, சேர்த்து கிளறி வேகவிடுங்கள். பின்னர் அதில் நாம் வேகவைத்து வைத்திருக்கும் கறியை போட்டு நன்றாக கிளற வேண்டும். வேகவைக்கும் பொழுது உள்ள நீரையும் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அப்பொழுது நாம் ஊற்றிய தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு மிளகு பொடி, மல்லி தழை சேர்த்து கிளறி 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கிவிடுங்கள். ருசியான, சத்தான நாட்டுக்கோழி வறுவல் ரெடி..!

 

 

 

Categories

Tech |