இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் முன் களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இதன்படி 5 லட்சம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியபோது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான வாஜித் மஜ்ரோஹ் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அதனை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் இந்தியாவால் இலங்கை, மியான்மர் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.