கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.