Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா செம… யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 

Oviya teams up with Yogi Babu in a new movie - Details - Tamil News -  IndiaGlitz.com

இந்நிலையில் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஓவியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |