பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் பாபு ஆண்டனி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.