Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா..!! லிங்குசாமி- ராம் பொத்தினேனியின் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Actor Akshara Gowda says she regrets doing Vijay's 'Thuppaki' | The News  Minute

மேலும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை அக்ஷரா கவுடா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் ஆதி பின்னிஷெட்டிக்கு ஜோடியாக அக்ஷரா கவுடா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |