Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஆஹா… “உங்களுக்கு அந்த ஆசை வந்திருச்சு போல”… ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தோன்றினார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும் மக்கள் மனதை கவர்ந்தது. இதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா. அண்மையில் காதல் ஆல்பம் ஒன்றை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளார். மேலும் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் புக் ஆகியுள்ளார்.

இவர் தற்போது வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். தனுசை பிரிந்ததிலிருந்து தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள், காபி குடிக்கும் போட்டோ, அரைகுறை உடையில் போட்டோ என பதிவிட்டு வருகின்றார். இவரின் போட்டோக்களை பார்த்த இணையதள வாசிகள் போட்டோக்களில் கிளாமர் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்துவிட்டதா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஏன் இயக்கத்தில் இறங்கி ரிஸ்க் எடுக்கிறீர்கள்? நடிப்பில் இறங்கி தனுசுக்கு டஃப் கொடுக்க வேண்டியதுதானே என கிண்டலடித்து வருகின்றனர்.

Categories

Tech |