Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா தொடங்கிருச்சு…. பூக்குழி இறங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனி மாவட்டம் அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெறும். மேலும் திருவிழாவில் மூல சன்னதியில் அமைந்திருக்கும் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் நறுமண பொருட்கள் அபிஷேகங்களும் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பங்குனி மாத திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்விழாவில் பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்துள்ளார்கள். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கி திருவிழாவை சிறப்பித்துள்ளார்கள். இவ்விழாவிற்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்ததோடு விழாவினையும் கலைக்கட்ட வைத்துள்ளார்கள்.

Categories

Tech |