திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகபெருமான் கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் கோவிலை தெரியாத நபர்களே இருக்கமுடியாது. இந்நிலையில் அக்கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 18ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அத்திருவிழாவின் தொடக்கத்திலிருந்தே முருகப்பெருமான் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
மேலும் அவ்விழாவின் ஒரு பகுதியான முருகப்பெருமான்-தெய்வானை தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கல்யாண திருவிழாவிற்கு மதுரையிலிருக்கும் மீனாட்சி தாயாரும், பிரியாவிடையுடரான சொக்கநாதரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மாண்டமாக தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்துள்ளார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.