Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆஹா ஓஹோனு புகழுறீங்களே…! அய்யய்யோ… எடப்பாடியே ஆச்சிரியப்பட போறாரு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  ஜூலை 11ஆம் தேதி ஒற்றை தலைமையாக எடப்பாடி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையோடுதான் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் பத்தாம் தேதி நாங்கள் திரும்ப வருகிறோம் என்று தான் சென்றிருக்கிறார்கள். அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கை…

பாசமிகு அண்ணன்,  சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த எளியவர்,  தூயவர்,  பண்பாளர் அண்ணன் எடப்பாடி அவர்கள் சாதி – சமய – இன வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவர். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற ஒரு  கொள்கை வழியில் நிற்பவர். வேண்டியவர்,  வேண்டாதவர் என்று பார்ப்பதில்லை.

தன்னை சுற்றி வருபவர்களை வைத்து இயக்கத்தை நடத்த விரும்பவில்லை. கடைக்கோடியில் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் கடவுளை போல்….  கடை கோடியில் இருக்கின்ற உழைக்கின்ற தொண்டனை முதல் நிலையில் புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி அம்மாவும் முன்னிறுத்துவார்களோ அந்த வழியிலே….  கொள்கை வழியிலேயே நிற்பவர்.

இயக்கத்தின் நன்மைக்காக, தொண்டர்களின் நன்மைக்காக, தொண்டர்களின் எதிர்காலத்திற்காக, ஏனென்றால் ரத்தம் சிந்தி,  தியாகம் செய்து ஒவ்வொரு தொண்டனும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எந்த பதிவுயுமே அனுபவிக்காத தொண்டர்கள். ஒரு கவுன்சிலர் கூட ஆகாமல் 50 ஆண்டுகள் உழைக்கின்ற தொண்டர்கள் இன்னும் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். நாம் இந்த இயக்கத்தினாலே சட்டமன்ற உறுப்பினராக… அமைச்சராக… முதல்வராக….. எத்தனையோ பதவிகளை நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் பதவிகளை பெற்று இருக்கிறீர்கள். எந்த பதவியும் பெறாத  தொண்டன் இன்னும் இந்த இயக்கத்தின் நலனுக்காக எதிர்பார்ப்பு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். அந்த தொண்டனுடைய நலனுக்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையிலே நீங்கள் முடிவை எடுக்க வேண்டும். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எல்லா தொண்டர்களிடமும் கோரிக்கை என தெரிவித்தார்.

Categories

Tech |