Categories
உலக செய்திகள்

ஆஹா….! கண்கொள்ளா காட்சி…. பனி மூட்டத்திற்கு நடுவில் தோன்றும்…. வானுயர்ந்த கட்டிடங்கள்….!!

ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலையிலிருந்து  கடுமையான மூடுப்பனி நிலவி வருகிறது. இந்நிலையில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது பனிபடர்ந்து காணப்படுகின்றன. இங்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டுள்ளது.
இங்கே அடர்ந்த பனியால் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு, ஓட்டுநர்களுக்கு எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நாட்டின் வானிலை ஆய்வு மையம்  வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்கும்படி  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இந்த பனி மூட்டம்  சுவாச மண்டலத்தை எரிச்சலடையச் செய்யலாம், நுரையீரல் நோய் மற்றும் இதய நோய்களை மோசமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |