நடிகை ஷபானா முதல் முறையாக தனது காதலன் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷபானா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆர்யனும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது.
https://www.instagram.com/p/CTXkRYKvZFO/
இதுவரை இவர்கள் மறைமுகமாக சமூக வலைத்தளங்களில் சில போஸ்ட்கள் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஷபானா முதல் முறையாக தனது காதலன் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.