சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட கலக்கலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .
We are DONsssss @Siva_Kartikeyan @Dir_Cibi @sivaangi_k @priyankaamohan @Darshan_Offl @RJVijayOfficial 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾 pic.twitter.com/0MeGC5lNnH
— Bala saravanan actor (@Bala_actor) August 7, 2021
இந்நிலையில் டான் படப்பிடிப்பின் இடையே சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.