Categories
அரசியல்

ஆஹா சூப்பர்!…. மலிவு விலையில் ரியல்மி பேட் மினி டேப்லெட்…. அசத்தலான அறிமுகம்….!!!!

பிலிப்பென்ஸ் நாட்டில் கைக்கு அடக்கமான, மலிவு விலையில் ரியல்மி பேட் மினி டேப்லெட்டை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 84.59 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேட்ஷியோவுடன் 8.7 இன்ச் டிஸ்பிளே இந்த பேடில் இடம்பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Unisoc T616 Soc பிராசஸரில் இந்த டேப்லெட் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த பேடில் 5 மெகாபிக்ஸல் முன்பக்க ஷூட்டர் கேமரா, 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, சன்லைட் மோட், Mali G57 GPU ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 7.6mm அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் இந்த டேப்லெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 6400 mAh பேட்டரி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டேப்லெட் 64 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் பிலிப்பைன்ஸை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Categories

Tech |