சிவகார்த்திகேயன், சூரி இருவரும் டான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, சமுத்திரகனி, சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#Don Shooting spot Thampi @Siva_Kartikeyan udan 🥰 pic.twitter.com/lI3Mfdxrk7
— Actor Soori (@sooriofficial) August 11, 2021
இந்நிலையில் நடிகர் சூரி இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘டான் படப்பிடிப்பில் தம்பி சிவகார்த்திகேயனுடன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் சூரி, சிவகார்த்திகேயன் இருவரும் லேசான இருளில் இருக்கும் இந்த புகைப்படம் ரஜினியின் அண்ணாத்த படத்தின் புகைப்படம் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.