ரெடிங் கிங்ஸ்லி நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டாக்டர் படத்தில் குக் வித் கோமாளி தீபா, யோகி பாபு என பலர் நடித்திருந்தாலும் ரெடிங் கிங்ஸ்லி தான் அனைவரையும் வயிறு குலுங்க சிரித்து வைத்துள்ளார். மேலும் டாக்டர் படத்தில் யோகி பாபுவை விட ரெடின் கிங்ஸ்லியின் காமெடி தான் தியேட்டர்களில் சிரிப்பலை எழுவதற்கு காரணமாக இருந்தது.
இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரெடின் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து இவர் விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, சிவாவின் இடியட் போன்ற படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார். விரைவில் ரெடின் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.