நடிகை மீனா அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் .
— Meena Sagar (@Actressmeena16) August 1, 2021
சமீபத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை மீனா அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.