Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்…!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எப்.ஐ.ஆர் படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ எப்.ஐ.ஆர் படத்தின் முதல் காப்பி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய இந்த பயணம் அனைத்தையும் உங்களுக்கு காண்பிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |