Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் இவர்தான்… எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய கூட்டணி…!!!

‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் 67-வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Asuran Fame Vetrimaaran & Thalapathy Vijay To Do A Blockbuster Collab Soon,  Director Confirms This News

முதல் முறையாக வெற்றிமாறன்- விஜய் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதன்பின் இவர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்த பின் வெற்றிமாறன் தளபதி 67  படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |