நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இதையடுத்து இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன் பின் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சிம்ரன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் அந்தகன், ராக்கெட்ரி நம்பி விளைவு, துருவ நட்சத்திரம், சியான் 60 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/reel/CSRf0euoHMd/?utm_source=ig_embed&ig_rid=3bac45b6-1256-4145-a057-05f3d831e971
இந்நிலையில் நடிகை சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . கடந்த 2002 ஆம் வெளியான யூத் படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் இணைந்து நடனமாடிய ஆல்தோட்ட பூபதி பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது 19 வருடங்கள் கழித்து அதே பாடலுக்கு சிம்ரன் நடனமாடிய இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .