தமிழ் சினிமாவில் “சிவப்பு மஞ்சள் பச்சை” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லிஜோ ஜோஸ் “ஜெய்பீம்” படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் “பிரண்ட்ஷிப்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லாஸ்லியா தற்போது “கூகுள் குட்டப்பா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் நடிகை லிஜோ மோல் ஜோஸ் இருவரின் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு “அன்னபூரணி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
லயனல் ஜோஷ்வா இயக்க உள்ள இந்த படம் த்ரில்லர் ஜானரில் உருவாக உள்ளது. “அன்னபூரணி” படத்திற்கு ஹெக்டர் ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுத, படத்தொகுப்பை கலைவாணன் கையாளுகிறார். இந்த படத்தில் ராஜீவ் காந்தி, தரணி ரெட்டி, வைரபாலன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தினை ஹரி பாஸ்கர் தயாரிக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.