19 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் கதிர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் கதிர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் புதுமுக நடிகர் கிஷோர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் .
இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம், காதல் தேசம், காதல் வைரஸ் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.