அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படம் 3டி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
Poore feel ke saath thrill experience karna on 19th August. ⚡#BellBottom also arriving in 3D. #BellBottomIn3D@vashubhagnani @Vaaniofficial @humasqureshi @LaraDutta @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani @poojafilms pic.twitter.com/5kAGH8uDsx
— Akshay Kumar (@akshaykumar) August 2, 2021
மேலும் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால் பெல்பாட்டம் படம் 3டி-யிலும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.