Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா! தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்…. பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் பொன்னியின் செல்வன்….. மிரட்டலான டிரைலர் வீடியோ இதோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை பிரம்மாண்டமான படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் சேர்ந்து தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இந்தப் படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், பாகுபலி படத்தின் சாதனைகளை எல்லாம் பொன்னியின் செல்வன் முறியடித்து விடும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |