Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆஹா… ”பல் துலக்க புதிய தொழில்நுட்பம்” கிருமி தொற்றை விரட்டிய ஜியோமி …!!

மின்னணு சாதனங்களை தயாரிப்பில் ஆதிக்கம்  செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

பல் துலக்குவது தினமும் வாடிக்கையாக மேற்கொள்ளும் நிகழ்வு . பொதுவாக நாம் பல்துலக்கி முடித்ததும் டூத் பிரஷ்ஷை ஆங்காங்கே போட்டுவிடுவோம். குறிப்பாக பாத்ரூம் தொடங்கி வீட்டின் சன்னல் வரை எதாவது ஒரு இடத்தில் வைத்து விடுகின்றோம். மறுநாள் அதனை எடுத்து சிறிது நீரில் ஈரமாக்கிய பின்பு மீண்டும் பற்பசையை வைத்து பல் துலக்குவோம்.

தினமும் பல் துலக்குகின்றோம் இதனால் பற்களில் உள்ள கிருமி அழிந்து விடுகின்றது என்று நம்பும் நாம் டூத் பிரஷ்ஷை அங்கங்கே வைத்து அதன் மூலம் கிருமி தொற்றை மீண்டும் பல் துலக்கி உடலுக்குள் விடுகின்றோம். பல்லை சுத்தம் செய்யும் நாம் பிரஷ் மூலம் பரவும் நோய் தொற்றை கண்டு கொல்வதில்லை.  இதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இந்நிலையில் தான் ஜியோமி நிறுவனம் சென்சார் மூலம் பற்பசையை இது வெளியிடும் டிஸ்பென்சர் என்ற தானியங்கி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் பற்பசை வெளியாகும் பகுதியில் டூத் பிரஷ்ஷை நீட்டினால் அதிலுள்ள உணர் சென்சார் மூலம் பற்பசை டூத் பிரஷ்க்கு வந்து விடும்.

மேலும் பற்பசை வெளியாகும் முன்பாக டூத் பிரஷ்ஷை நாம் நீட்டியதும் அதில் இருந்து வரும் புற ஊதாக் கதிர் டூத் பிரஷ்ஷில் உள்ள தொற்று கிருமிகளை அழிக்கின்றது. ஒரு நபர் பல் துலக்க எவ்வளவு பற்பசை தேவையோ அதை மட்டுமே டிஸ்பென்சர் வெளியிடும்.  இதில் 300 மி.லி. அளவுள்ள பேஸ்ட்டை வெளிக்காற்று பரவாத வகையில் பாதுகாக்கும் அம்சம் உள்ளது.

இதோடு நாம் ஒவ்வொரு முறை டூத் பிரஷ்ஷை நீட்டும் போதும் அது புறஊதாக் கதிர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. இதனை செயல்படுத்த ஜியோமி மிஜியா இயங்குதளம் (ஆப்) உள்ளது. அமெரிக்காவில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ள இதன் விலை சுமார் ரூ.900 என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |