நடன இசைக்குழுவுடன் நடனமாடிய பிரபல இசையமைப்பாளரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி, பேட்ட, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார் .
Aahaa…. Pinnringaley ji @Music_Santhosh 👏👏 😍 #Chiyaan60 https://t.co/UllOeUQxsb
— karthik subbaraj (@karthiksubbaraj) March 29, 2021
இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை பணிகளின் போது நாட்டுப்புற இசைக் குழுவுடன் சந்தோஷ் நாராயணன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ் ‘ஆஹா பின்றீங்களே…’ என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.