Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! பிரம்மாண்டமான தோற்றம், காண கண் கோடி வேண்டும்…. யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்…. கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்….!!

மதுரை மாவட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் முக்கிய கடவுளான பெருமாள் வீற்றிருக்கிறார். இக்கோவிலில் பெருமாள் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுப்பார். இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பெருமாளை பூஜித்து தரிசனம் பெறுவது வழக்கம். மேலும் இக்கோவிலுக்கு வரும் மக்கள் பெருமாளின் தரிசனத்திற்கு பிறகு மன நிம்மதியுடன் வீடு திரும்புவதாக கருதப்படுகிறது.

இதனால் அனைவரும் பெருமாளே தினமும் தரிசனம் செய்து விடுவார்களாம். இவ்வாறு இருந்து வரும் நிலையில் தற்போது இக்கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் மூலவர் தினமும் விதவிதமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். அந்தவகையில் சுவாமி பெருமாள் ஐந்தாம் நாளன்று யானை வாகனத்தில் பிரம்மாண்டமாகவும், சிறப்பு அலங்காரத்துடனும் எழுந்தருளி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு அருள் வழங்கியுள்ளார்.

Categories

Tech |