பிரிட்டனில் புகைபிடிக்க வேண்டாம் என்று நினைத்தவருக்கு 100 பவுண்ட் பரிசுத்தொகை கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிலுள்ள Southamton என்ற பகுதியில் வசிக்கும் John McFadden என்ற 63 வயதுடைய நபர் கடந்த மாதத்தில் அங்குள்ள ஒரு கடையில் புகைப்பிடிக்க Vape வாங்குவதற்கு சென்றிருக்கிறார். ஆனால் புகை பிடிக்க வேண்டாம் என்று நினைத்தவர், நேஷனல் லாட்டரியினுடைய ஸ்கிராட்ச் கார்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன்பின்பு அந்த கார்டை சுரண்டிய போது, முதலில் 50 ஆயிரம் பவுண்ட் என்று இருந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மற்றொன்றையும் சுரண்டி பார்த்தவர், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி நின்றுள்ளார். அதாவது அவருக்கு மேலும் ஐம்பதாயிரம் பவுண்ட் கிடைத்திருக்கிறது.
மொத்தமாக ஒரு மில்லியன் பவுண்டு (27 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரத்து 702) ரூபாயை John பெற்றிருக்கிறார். இதை சிறிதும் எதிர்பார்க்காத John இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஆனால் John தன் டெலிவரி டிரைவர் பணியை விடவோ, ஓய்வு பெறவோ விரும்பவில்லையாம். ஆனால் அதே நேரத்தில் தன் குடும்பத்தாருடன் அதிகமான நேரம் செலவழிக்க விரும்புகிறேன் என்றும் மனைவியுடன் விவாகரத்து ஆன பிறகு குழந்தைகள் Weymouth நகரில் வசிக்கிறார்கள்.
அவர்களையும் என்னுடைய பேரகுழந்தைகளையும் என்னால் முடிந்த அளவிற்கு கவனித்து வருகிறேன். இதற்கு முன்பு வேன் ஓட்டி கவனித்து வந்தேன். இப்போது இவ்வளவு பெரிய பரிசு தொகை கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.