Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா! முதல்வர் ஆட்சி செய்யும் விதம்…. இந்தியாவே திரும்பி பார்க்கும்படி இருக்கே…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் அதிருப்தியின் காரணமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |