திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories