Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது..

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பிரபல நிறுவனத்திடமிருந்து 45 ஏக்கரை லஞ்சமாக வாங்கியுள்ளார். இந்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமலாக்கத்துறை தகவல்தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் கோயம்புத்தூரில் 45 ஏக்கர் நிலத்தை ED தற்காலிகமாக இணைத்துள்ளது ரூ. 2004-2007 காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன்னாள் கேபினட் அமைச்சர் ஆ.ராஜாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 கோடி வாங்கப்பட்டது. ஸ்ரீ ஏ. ராஜா வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதிக்காக மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் இருந்து நிலம் வாங்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |