திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ஆ. ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது.
அதன் பிறகு ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஷ்வ பரிஷத் தலைவர் வெங்கடாசலம் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆ. ராசாவை கண்டித்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திரு ஆ. ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளை தூண்டும் இத்தகைய பேச்சுக்களை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. திமுக அரசின் தோல்விகளை திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு திரு. ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். (1/2)@CMOTamilnadu @mkstalin
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 17, 2022