Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ-யில் வாங்கிய மொபைலை பரிசளித்தது குத்தமா?… மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்….!!!!

ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திலுள்ள கலிமேலா தாலுகாவின் MPV 14 கிராமத்தில் கண்ஹேய் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற வருடம் ஜோதிமண்டல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் கண்ஹேய் தன் மனைவி ஜோதிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினார். அந்த போனின் விலை அதிகமாக இருந்ததால், அதை இஎம்ஐ-யில் வாங்கியுள்ளார். எனினும் தன் மனைவியிடம் இந்த மாதத்தவணை குறித்து கண்ஹேய் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இறுதித்தவனை தொகையை கண்ஹேய் செலுத்தியதும், நிதி நிறுவன அதிகாரிகள் தம்பதியினரின் கையெழுத்துக்காக அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தான் ஜோதிக்கு தான் பயன்படுத்திய மொபைல் போன் இஎம்ஐ-யில் வாங்கிய விபரம் தெரியவந்துள்ளது. இது குறித்து கண்ஹேய் தன்னிடம் கூறாமல் இருந்ததால் ஜோதி கோபமடைந்தார். இதனால் கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், கணவன் முன் ஜோதி திடீரென விஷம் குடித்திருக்கிறார். இதனை பார்த்த கண்ஹேய் அதிர்ச்சியில் தரையில் சரிந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜோதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதற்கிடையில் கண்ஹேய் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |