இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர் கல்வி கட்டணம் பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ignou.ac.in.என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 0452- 2380775, [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ignouadmission.samarth.edu.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.