Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இங்கதான் வச்சிட்டு போனேன்” சுகாதார பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பணம் திருடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில்  ரங்கசாமி என்பவர் இவர்  வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும்  சுகாதார நிலையம் வந்துள்ளார். அப்போது ரங்கசாமி பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இதனையடுத்து ரங்கசாமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி  உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை  திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |