Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்கதான் விட்டுட்டு போயிருந்த…. வந்து பார்த்தா இதுல விழுந்திருக்கு…. போராடி மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினர்….!!

ராணிப்பேட்டையில் சினை மாடு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் சோழியன் கரையில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் மாடு வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டதால் சினை மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சினை மாட்டை மேய்ச்சலுக்காக அப்பகுதியிலிருக்கும் நிலத்தில் கட்டிப்போட்டிருந்திருக்கிறார். இப்பகுதியில் 80 அடி ஆழ கிணறு ஒன்று அமைந்துள்ளது.

அக்கிணற்றுக்குள் சினை மாடு கால் தவறி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் புளியம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோபி தலைமையிலான 8 வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றினுள் 5 அடி ஆழத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சினை மாட்டை கயிறு கட்டி மேலே இழுத்து உயிருடன் மீட்டுள்ளார்கள்.

Categories

Tech |