சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினருக்கு நாகநாதபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் மணிகண்டன் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்த மணிகண்டன், பிரவீன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 130 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.