ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே ட்ரோன்கள் பறந்து வந்தால் அவற்றை ரப்பர் புல்லட்டால் சுட்டுத்தள்ள பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்ப சாதனங்களை கண்டுபிடிக்கும் வரை ரப்பர் தோட்டா, துப்பாக்கிகளை பயன்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகளால் நிலத்திலிருந்து 60 முதல் 100 மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.