செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ராமிரெட்டிபட்டி பகுதியில் பழைய கிணறு இருந்துள்ளது. இந்த கிணறு மாயமானதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று அதே பகுதியில் வசிக்கும் நெசவுத் தொழிலாளியான சத்யராஜ்(32) என்பவர் செல்போன் கோபுரத்தில் ஏறி கிணற்றை மீட்க வலியுறுத்தி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதூர்யமாக பேசி அந்த வாலிபரை கீழே இறங்கி வரச் செய்தனர். இதனை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.