அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இறுதி கட்டத்தில் 2 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக அந்நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிஷி சுனக், தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், என்னுடைய எதிர் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என சில சக்திகள் நினைப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறினார். மேலும் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.