Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் பயண கட்டுப்பாடுகள்…. வரும் 18 ஆம் தேதி முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இங்கிலாந்தில் வருகிற வெள்ளிக்கிழமை(மார்ச்.18) முதல் நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தர வேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் பயண விபரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவோ 1அவசியமில்லை.

அதாவது இங்கிலாந்தில் ஏப்ரல் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் தேவைகள் இன்றி குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் அடிப்படையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 % பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுவிட்டனர். மேலும் 67 சதவீதத்தினர் 3-வது “டாப்-அப் பூஸ்டர்” டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.

Categories

Tech |