இங்கிலாந்து நாட்டில் பருவநிலை தொடர்பாக நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கு விருப்பம் கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ என்ற பருவ மழை தொடர்பான மாநாடு ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வாறு இந்த வருடம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் வெளியுறவு செயலாளர், இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளரை லண்டனில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த மாநாடு இந்த மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த மாநாடு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.